இந்த ஆண்டுக்கான டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் கிறிஸ் லின் தலைமையிலான மரத்தா அரேபியன்ஸ் - வாட்சன் தலைமையிலான டெக்கான் கிலாடியேட்டர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மரத்தா அரேபியன்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெக்கான் கிலாடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளுக்கு 87 ரன்களை எடுத்தது. அந்த அணியில், அசிஃப் கான் 25 ரன்கள் எடுத்தார். மரத்தா அரேபியன்ஸ் அணி சார்பில் டுவைன் பிராவோ இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
-
Here is the Champions of Aldar Properties Abu Dhabi T10 2019!!! @MarathaArabians, this is epic!!!🏆#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #marathaarbians #deccangladiators #t10final pic.twitter.com/stDP3s2AVr
— T10 League (@T10League) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here is the Champions of Aldar Properties Abu Dhabi T10 2019!!! @MarathaArabians, this is epic!!!🏆#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #marathaarbians #deccangladiators #t10final pic.twitter.com/stDP3s2AVr
— T10 League (@T10League) November 24, 2019Here is the Champions of Aldar Properties Abu Dhabi T10 2019!!! @MarathaArabians, this is epic!!!🏆#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #marathaarbians #deccangladiators #t10final pic.twitter.com/stDP3s2AVr
— T10 League (@T10League) November 24, 2019
இதைத்தொடர்ந்து, 89 ரன்கள் இலக்குடன் விளையாடிய மரத்தா அரேபியன்ஸ் அணி 7.2 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம், மரத்தா அரேபியன்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெக்கான் கிலாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மரத்தா அரேபியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சத்விக் வால்டன் 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். அதில், ஆறு பவுண்டரி, மூன்று சிக்சர் அடங்கும்.