யு-19 உலகக்கோப்பையின் போது ஆஃப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது பாகிஸ்தானின் தொடக்க வீரர் முகமது ஹுரைராவை மன்கட் விதியின் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் மீண்டும் கிரிக்கெட்டில் மன்கட் தேவையா என்ற விவாதம் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் ராஜஸ்தானின் ஜோஸ் பட்லரை மன்கட் செய்தார். இதற்கு பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். கிரிக்கெட்டிலிருந்து மன்கட் விதியை அகற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. மன்கட் செய்வதால் கிரிக்கெட்டில் ''ஸ்பிரிட் ஆஃப் தி கேம்'' பாதிப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், மன்கட் விதியை அகற்ற முடியுமா? என ஐசிசி, எம்சிசி ஆகியவற்றை இணைத்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பலிளிக்கும் விதமாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், '' மன்கட் விதியை அகற்ற வேண்டும் என்றால் விரிவான விவாதங்கள் வேண்டும்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
-
Law removal might need some deliberation!! A Shredder might do the trick for now😂😂🤩 https://t.co/8z5TNT57kZ
— Ashwin Ravichandran (@ashwinravi99) February 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Law removal might need some deliberation!! A Shredder might do the trick for now😂😂🤩 https://t.co/8z5TNT57kZ
— Ashwin Ravichandran (@ashwinravi99) February 1, 2020Law removal might need some deliberation!! A Shredder might do the trick for now😂😂🤩 https://t.co/8z5TNT57kZ
— Ashwin Ravichandran (@ashwinravi99) February 1, 2020
இந்த ட்வீட்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே மன்கட் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: அஷ்வின் செய்தது சரியா? தவறா? - 'மன்கட்' குறித்த பார்வை!