AUSvSL: ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தோடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர் தங்களுக்கு வழக்கமான அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தனர்.
-
Aaron Finch is on 🔥
— ICC (@ICC) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He brings up his 10th T20I fifty off just 31 balls, in the first #AUSvSL T20I in Adelaide.
Follow the action live 👇https://t.co/C0puszBAjz pic.twitter.com/JgOsMud5JP
">Aaron Finch is on 🔥
— ICC (@ICC) October 27, 2019
He brings up his 10th T20I fifty off just 31 balls, in the first #AUSvSL T20I in Adelaide.
Follow the action live 👇https://t.co/C0puszBAjz pic.twitter.com/JgOsMud5JPAaron Finch is on 🔥
— ICC (@ICC) October 27, 2019
He brings up his 10th T20I fifty off just 31 balls, in the first #AUSvSL T20I in Adelaide.
Follow the action live 👇https://t.co/C0puszBAjz pic.twitter.com/JgOsMud5JP
அதன்படி ஃபின்ச் மற்றும் வார்னர் இலங்கை அணியின் பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களை திணரச் செய்தனர். இதன் மூலம் ஆரோன் பின்ச் 31 பந்துகளில் அரைசதம் அடிக்க அவரைத் தொடர்ந்து வார்னரும் 29 பந்துகளில் சிக்சர் மூலம் தனது அரைசதத்தினைக் கடந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஃபின்ச் 36 பந்துகளில் 64 ரன்களை எடுத்திருந்தபோது சண்டகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு இலங்கை அணி பந்துவீச்சை சோதித்து பார்த்தார்.
-
Fifty up for Glenn Maxwell!
— ICC (@ICC) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Australia batsman brings up his seventh T20I fifty off just 22 balls 🔥
Follow #AUSvSL live 👇https://t.co/C0puszBAjz pic.twitter.com/hcDQTuqj9Z
">Fifty up for Glenn Maxwell!
— ICC (@ICC) October 27, 2019
The Australia batsman brings up his seventh T20I fifty off just 22 balls 🔥
Follow #AUSvSL live 👇https://t.co/C0puszBAjz pic.twitter.com/hcDQTuqj9ZFifty up for Glenn Maxwell!
— ICC (@ICC) October 27, 2019
The Australia batsman brings up his seventh T20I fifty off just 22 balls 🔥
Follow #AUSvSL live 👇https://t.co/C0puszBAjz pic.twitter.com/hcDQTuqj9Z
இலங்கை அணியின் பந்துவிச்சை மைதானத்தின் 360 டிகிரி கோணங்களுக்கு பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களுக்கு கண்ணீர் வரவைத்தார். அதுமட்டுமில்லாமல் 22 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். அதன்பின் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ரன்களை எடுத்திருந்தபோது ஷனகா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மறுமுனையில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளர். இறுதிவரை களத்திலிருந்த டேவிட் வார்னர் 56 பந்துகளில் 4 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் என 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
David Warner doubles his birthday celebrations with a maiden T20I 💯
— ICC (@ICC) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He brings up his century on the last ball of the innings!#AUSvSL pic.twitter.com/3vgklhKb0t
">David Warner doubles his birthday celebrations with a maiden T20I 💯
— ICC (@ICC) October 27, 2019
He brings up his century on the last ball of the innings!#AUSvSL pic.twitter.com/3vgklhKb0tDavid Warner doubles his birthday celebrations with a maiden T20I 💯
— ICC (@ICC) October 27, 2019
He brings up his century on the last ball of the innings!#AUSvSL pic.twitter.com/3vgklhKb0t
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. அதன்பின் தற்போது 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.