இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று தொடங்கிய மூன்றாம் சுற்று ஆட்டத்தில், தமிழ்நாடு அணி, மத்தியா பிரதேச அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. மீண்டும் அபராஜிதுடன் களமிறங்கும் தமிழ்நாடு அணி, இந்த முறை அஸ்வினையும் அணியிலிருந்து வெளியேற்றியுள்ளது.
அதேபோல் கடந்த போட்டியில் பங்கேற்காத நட்சத்திர வீரர்கள் முரளி விஜய், தினேஷ் கார்திக், விஜய் சங்கர், முருகன் அஸ்வின், அபினவ் முகுந்த் என அனைத்து முன்னணி வீரர்களையும் நீக்கிவிட்டு இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.
ஏற்கனவே இத்தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் தொல்வியை தழுவியிருக்கும் தமிழ்நாடு அணி இந்த முறையும் கூடுதலாக அணியில் இருந்த நட்சத்திர வீரர்களை நீக்கிவிட்டு களமிறங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
-
#TNvMP | Toss Update
— TNCA (@TNCACricket) December 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Madhya Pradesh won the toss and elected to bowl first
Catch the action LIVE on Hotstar#RanjiTrophy pic.twitter.com/WLBJafIXjD
">#TNvMP | Toss Update
— TNCA (@TNCACricket) December 25, 2019
Madhya Pradesh won the toss and elected to bowl first
Catch the action LIVE on Hotstar#RanjiTrophy pic.twitter.com/WLBJafIXjD#TNvMP | Toss Update
— TNCA (@TNCACricket) December 25, 2019
Madhya Pradesh won the toss and elected to bowl first
Catch the action LIVE on Hotstar#RanjiTrophy pic.twitter.com/WLBJafIXjD
தமிழ்நாடு அணி: பாபா அபாரஜித், முகுந்த், கங்கா ஸ்ரீதர், கௌசிக் காந்தி, ஹரி நிஷாந்த், ஜெகதீசன், ஜெகதீசன் கௌசிக், முகமது, கிருஷ்ணமூர்த்தி, சாய் கிஷோர், நடராஜன்.
இதையும் படிங்க: 4 மாதத்தில் 26 கிலோ எடையைக் குறைத்தது எப்படி? வைரலாகும் சானியா மிர்சாவின் வீடியோ!