இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பகல் - இரவு டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பொதுவாக பகல், இரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்துகள் மட்டுமே, வீசுவதற்குப் பயன்படுத்தப்படும். அதை நினைவுகூரும் வகையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த டெஸ்ட் போட்டியின் காரணமாக கொல்கத்தா நகரமே, இளஞ்சிவப்பு நிற ஒளிகளால் மின்னி வருகிறது.
-
Sweets go pink in kolkata @BCCI @JayShah @CabCricket pic.twitter.com/dDfJYYRkfk
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sweets go pink in kolkata @BCCI @JayShah @CabCricket pic.twitter.com/dDfJYYRkfk
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019Sweets go pink in kolkata @BCCI @JayShah @CabCricket pic.twitter.com/dDfJYYRkfk
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சவுரவ் கங்குலி இந்த டெஸ்ட் போட்டியைப் பற்றி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
-
Well @bcci and @cab ... look forward to 5 days @JayShah pic.twitter.com/EbZigS3JMk
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Well @bcci and @cab ... look forward to 5 days @JayShah pic.twitter.com/EbZigS3JMk
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019Well @bcci and @cab ... look forward to 5 days @JayShah pic.twitter.com/EbZigS3JMk
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019
அவரின் அந்த ட்விட்டர் பதிவில் இந்த ஐந்து நாட்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனி இடத்தைப் பிரதிபலிக்கும் எனக் கூறி, இளஞ்சிவப்பு நிறத்தினால் ஒளியூட்டப்பட்ட மாளிகைகளின் காணொலியை இணைத்துள்ளார். இதன்மூலம் கொல்கத்தாவில் நடக்கும் பகல், இரவுப் போட்டியை வங்காள மக்கள் வரவேற்கத் தொடங்கி விட்டனர் எனச்சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
-
Can’t get better then this @bcci @cab pic.twitter.com/RQEI66Thw6
— Sourav Ganguly (@SGanguly99) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Can’t get better then this @bcci @cab pic.twitter.com/RQEI66Thw6
— Sourav Ganguly (@SGanguly99) November 20, 2019Can’t get better then this @bcci @cab pic.twitter.com/RQEI66Thw6
— Sourav Ganguly (@SGanguly99) November 20, 2019
தற்போது சவுரவ் கங்குலியின் ட்விட்டர் பதிவு இந்திய ரசிகர்களிடையே வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: NZ VS ENG 2019: ஸ்டோக்ஸ், பட்லர் அதிரடியால் வலுவான நிலையில் இங்கிலாந்து!