ETV Bharat / sports

கோவிட்-19: ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்த சிஎஸ்கே! - பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியப் பிரதமர் இன்று (மார்ச் 22) நாட்டு மக்களை ‘மக்கள் ஊரடங்கு’ பின்பற்றுமாறு வலியுறுத்தியதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ரசிகர்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

Let's make life hard for virus: CSK urge people to stay in their 'den'

author img

By

Published : Mar 22, 2020, 7:35 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. காரணம் இப்பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 11ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 22ஆம் தேதி (இன்று) பொதுமக்கள் ஊரடங்கை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார். அதன்படி இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லாமல், தங்களது வீடுகளிலேயே ஆரோக்கியமாக இருக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரின் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளது. சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருக்க வேண்டும். உங்கள் வீடுகளில் உள்ளவர்களையும், உங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு, அதற்கு எதிராகப் போராடிவருபவர்களுக்கு விசில்போடுவோம்' எனப் பதிவிட்டுள்ளது.

சிஎஸ்கேவின் ட்விட்டர் பதிவிற்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:உலகக்கோப்பை: 2019இல் வில்லன், 2015இல் நாயகன்: இருமுகனாக இருந்த மார்டின் கப்தில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.