ETV Bharat / sports

புக்கோவ்ஸ்கி குறித்து கவலையாக உள்ளது - ஜஸ்டின் லாங்கர் - காமரூன் கிரீன்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்த தொடக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது கவலையாக உள்ளதென ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

Langer "worried" about concussed Pucovski

author img

By

Published : Dec 16, 2020, 6:54 PM IST

இந்நிலையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் கடந்த டிச.6ஆம் தேதி தொடங்கி டிச.8 ஆம் தேதி முடிவடைந்த இப்போட்டி டிராவில் நிறைவடைந்தது.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய ஏ அணியின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய புக்கோவ்ஸ்கி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சரில் காயமடைந்தார். இதையடுத்து அணியின் மருத்துவர் களத்திற்கு வந்து அவரை பரிசோதித்தார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக புக்கோவ்ஸ்கி ஆட்டத்திலிருந்து பாதியிலேயே விலகினார்.

அதன்பின் புக்கோவ்ஸ்கிக்கு எட்டு கட்டங்களாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு ஒன்பதாம் கட்டமாக மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பேசிய ஆஸி., அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், “புக்கோவ்ஸ்கி மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது நிலை குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுள்ளது.

புக்கோவ்ஸ்கி குறித்த கவலை:

இருப்பினும் அவர் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. ஏனெனில் அவர் நலமுடன் இருந்திருந்தால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இடம்பெற்றிருப்பார். கிரிக்கெட்டில் காயமடைவது சாதாரண ஒன்றுதான். அவர் மீண்டும் அணியில் இடம்பெறுவார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், வேகப்பந்துவீச்சாளர் ஹேரி கான்வே ஆகியோரும் காயமடைந்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஹோல்டிங் & ப்ரெண்ட்க்கு 'ஃப்ரீடம் ஆஃப் தி சிட்டி ஆஃப் லண்டன்’ விருது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.