ETV Bharat / sports

வீட்டையே கிரிக்கெட் அரங்காக மாற்றிய பாண்டியா பிரதர்ஸ்!

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Krunal & Hardik Pandya request people to stay at home to contain COVID-19

author img

By

Published : Mar 30, 2020, 9:19 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவது பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர். இப்பெருந்தொற்றால் இதுவரை சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களான குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இணைந்து ட்விட்டர் காணொலி மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

குருணால் பாண்டியாவின் ட்விட்டர் பதிவில், நாங்கள் அனைவரும் வீட்டிலேயே மகிழ்ச்சியாகவுள்ளோம், அதேபோல் நீங்கள் அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என்று பதிவிட்டு, காணொலியையும் இணைத்துள்ளார்.

அந்தக் காணொலியில், பாண்டியா சகோதரர்கள் இணைந்து வீட்டினுள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். சிறிது நேரத்தில், இருவரும் இணைந்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருங்கள் என்றும், கரோனாவை நாம் இணைந்து விரட்டுவோம் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா: தனது சேமிப்பிலிருந்து நன்கொடை அளித்த 15 வயது வீராங்கனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.