இது குறித்து அனில் கும்ப்ளே கூறுகையில்,
நீண்ட வருடங்களாக இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்துள்ளார். அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பராக அவர் இருப்பதால், மற்ற வீரர்களை விடவும் போட்டியின் தன்மை குறித்து அவரால் நன்கு ஊகிக்க முடியும். ஃபீல்டிங் செட் செய்வதில், தோனி மிகவும் கெட்டிக்காரர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சரியான ஃபீல்டிங் செட் செய்வதில் தோனி இல்லதாதது கோலிக்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்ட இருக்கும். ஃபீல்டிங் செட் செய்வதில் கோலி, தோனியை சார்ந்தே இருக்கிறார் என நான் கருதுகிறேன்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கடைசி 10 முதல் 15 ஓவர்களில் விராட் கோலி, பவுண்டரி லைனில்தான் ஃபீல்டிங் செய்வார். அந்த தருணத்தில், எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு எந்த லைன் மற்றும் லென்த்தில் பந்துவீச வேண்டும் எனவும் பந்துவீச்சாளர்களுக்கு தோனி தொடர்ந்து ஆசோசனை வழங்கி வருவார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தோனி இடம் பெற்றால், கோலி கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்தார்.