சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், இரண்டாம் இடத்தில் ரோஹித் ஷர்மாவும் நீடிக்கின்றனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடி 221 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அஸாம் மூன்றாம் இடத்தில் உள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விளாசி பிரென்சன் டெய்லர் 42ஆவது இடத்திற்கும், ஷேன் வில்லியம்ஸ் 46ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
அதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ட்ரெண்ட் போல்ட் முதலிடத்திலும், இந்திய வீரர் பும்ரா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி 24ஆவது இடத்திலிருந்து 16ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: நடால் - ஃபெடரர் ரைவல்ரிதான் உலகிலேயே சிறந்தது: பிவி சிந்து