ETV Bharat / sports

‘தல’ தோனியின் சாதனையை சமன் செய்வாரா ‘கிங்’ கோலி?! - Most Test Wins by Indian Captain

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற தோனியின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது.

தல தோனியின் சாதனையை சமன் செய்வாரா கிங் கோலி
author img

By

Published : Aug 21, 2019, 3:58 AM IST

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடைபெற்ற டி20, ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ஆண்டிகுவாவில் தொடங்குகிறது. இப்போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் தோனியின் டெஸ்ட் சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில், இந்திய அணி 27 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, 2014 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால், டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டார்.

Kohli
கோலி

கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றவுடன் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். குறிப்பாக, அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. இதன்மூலம், 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இதைத்தவிர, இந்திய அணி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

இதுவரை இந்திய அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி 26 வெற்றிகளை பதிவு செய்து மிரட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் இவர் தோனியின் சாதனையை சமன் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Intro:Body:

Ashes test - Smith out for third test 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.