இங்கிலாந்தில் நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன்குவிப்பில் ஈடுபட்டதன் மூலம் ஐசிசியின் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
இவர் இந்த தொடர் ஆரம்பிக்கும் முன் 857 புள்ளிகளைப் பெற்று டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது இவர் 937 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விராட் கோலியை விட 34 புள்ளிகள் முன்னிலையிலும் உள்ளார். இந்திய அணியின் விராட் கோலி 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
![ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/eeyzfs0wwamd7do_1509newsroom_1568556958_945.jpg)
இந்நிலையில் கொல்கத்தாவில் பிரபல தனியார் இரும்பு தொழிற்சாலையின் திறப்பு விழவிற்கு வருகை தந்திருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி செய்தியாளர்களைச் சந்தித்த போது நிருபர் ஒருவர் ஸ்மித் பற்றிய கேள்வியை எழுப்பினார்.
அதற்கு கங்கூலி, ’இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நான் மறுக்கவில்லை, அவரின் சாதனைகளும் அவ்வாறானதே. ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனை அவரைப் பற்றி எடுத்துறைக்கின்றது. ஸ்மித் செய்துள்ள சாதனை அளப்பறியது’ என கூறியுள்ளார்.
மேலும் அவர் வருங்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாகவும், இதற்கு மேல் நான் அதில் கவனம் செலுத்துவேன் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். அவரிடம் தோனி குறித்த கேள்விக்கு அவர், தோனியின் பங்கு அணியில் இன்றியமையாதது. அவர் மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும், அவர் அணியில் இடம்பிடிப்பது தேர்வுக் குழுவின் கையிலும், விராட் கோலியின் கையிலும் தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.