ETV Bharat / sports

இன்னும் எங்களால அத மறக்க முடியலங்க...! - கேன் வில்லியம்சன் உருக்கம்

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் தோல்வி குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் உருக்கமாகப் பேசியுள்ளார்.

kane williamson
author img

By

Published : Sep 13, 2019, 7:50 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்றளவும் அந்தப் போட்டியின் நினைவுகள் மட்டும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களைத் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன. காரணம் அந்தப் போட்டி இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த போட்டியாக அமைந்ததாகக் கூட இருக்கலாம்.

ஆம் இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குள்ளேயே போகுமா என்ற நிலையிலிருந்த நியூசிலாந்து அணி, அரையிறுதிக்குள் அதிரடியாக நுழைந்து இந்திய அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. இது அந்த அணியில் தொடர்ச்சியான இரண்டாவது ஃபைனலாகும்.

அடுத்ததாக இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தும் வந்து சேர்கிறது. இரு அணிகளும் முதல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகின்றன. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் அதுவும் கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்வது என்றால் சற்று கடினம்தான்.

இத்தனை பிரஷர்களையும் வைத்துக்கொண்டு நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் ஆடிகிறது. பெரிய ஸ்கோர் இல்லை என்றாலும் நியூசிலாந்து அணி 241 ரன்களை குவிக்கிறது. ஆனால் அதை சேஸ் செய்ய போகிறவர்கள் அசால்ட்டாக 300-க்கும் மேற்பட்ட ரன்களை அடிக்கும் பேட்டிங் வரிசை கொண்டவர்கள். அவர்களை நியூசிலாந்து பவுலர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறத் தொடங்கியது.

இங்கிலாந்து அணி 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆட்டத்தை மாற்றியமைத்து விட்டனர். இருப்பினும் இறுதிவரை போராடிய நியூசிலாந்து அணி நிச்சயம் இம்முறை கோப்பையுடன் நாடு திரும்பும் என உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் இறுதிக்கட்டத்தில் ‘பிளாக் கேப்ஸ்‘ செய்த தவறுகளை இங்கிலாந்து வீரர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு போட்டியை டிரா செய்துவிட்டனர்.

வரலாற்றிலேயே உலகக்கோப்பையை முடிவு செய்ய முதன்முறையாக சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் பல திருப்பங்கள்... இறுதியில் ஐசிசியின் விதியால் கோப்பை இங்கிலாந்து வசம் செல்கிறது. அந்த வெற்றியை இங்கிலாந்து மக்கள் கொண்டாடினாலும் உலகமே சோகத்தில் மூழ்கி நியூசிலாந்தின் விடாமுயற்சிக்கு வெற்றிக்கனி கிட்டாமல் போய்விட்டதே என்று கண்ணீர் வடித்தது.

kane williamson
இறுதிப்போட்டியில் நியூசிலாந்தின் வெற்றி கைமாறிய தருணம்

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி குறித்து யாரேனும் ஏதோ ஒன்றை கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ரக்பி அணியினரின் ட்விட்டர் பக்கத்தில் கூட அந்த ஃபைனல் பற்றி பேசப்படுகிறது.

மற்றவர்கள் பேசி வந்த அப்போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், "உலகக்கோப்பை ஃபைனல் தினந்தோறும் ஏதேனும் ஒரு வகையில் பேசப்படும் ஒரு விஷயமாக உள்ளது. அணி வீரர்கள் அப்போட்டியை பற்றி இன்னும் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறோம்.

எனினும் நாங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போட்டியில் அங்கம் வகித்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அப்போட்டியை எப்போது நினைத்துப் பார்த்தாலும் சிறந்த ஒன்றாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

kane williamson
நியூசிலாந்து அணி

அப்போட்டியில் நடுவர்கள் முடிவு தவறானதே, நியூசிலாந்தின் தோல்விக்கு காரணம் என்று ஆஸ்திரேலிய அம்பயர் சைமன் டஃபெல் தெரிவித்திருந்தார். ஆனால் நடுவர்கள் குறித்து விமர்சிக்காமல் அப்போட்டியில் இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக வில்லியம்சன் கூறியுள்ளார்.

மேலும் தோல்வியுடன் நாடு திரும்பினாலும் ரசிகர்கள் தங்களுக்கு அளித்த வரவேற்பு நேர்மறையாக இருந்தததாக புளகாங்கிதம் அடைந்த வில்லியம்சன், அந்தப் போட்டியை மக்கள் எவ்வாறு ரசித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

வரலாற்றில் வெற்றி மட்டுமே இனிப்பான தருணங்களை தராது சில சமயங்களில் தோல்வியும் கூட மக்களின் அன்பை அளிக்கும் என்பதற்கு சான்றுதான் இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.