டிஎன்பிஎல் டி20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் , விபி காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அணியின் கேப்டன் கௌஷிக் காந்தி மற்றும் ஹரிஷ் குமாரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழ்ப்பிற்கு 191 ரன்களை குவித்தது.
சிறப்பாக விளையாடிய கௌஷிக் காந்தி 50 ரன்கள்களையும், ஹாரிஷ் குமார் 20 பந்துகளில் 53 ரன்களையும் சேர்த்தனர். அதன் பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விபி காஞ்சி வீரன்ஸ் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
அந்த அணியின் சதிஷ் மட்டும் நிலைத்து ஆடி 26 பந்துகளில் 44 ரனக்ளை சேர்த்தார். இதன் மூலம் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரனக்ளை மட்டுமே எடுத்தது. காஞ்சி அணி சார்பில் ஹரிஷ் குமார் 4 விக்கேடுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் காஞ்சி அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் அணி. அணியின் வெற்றிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக ஆடிய ஹரிஷ் குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.