ETV Bharat / sports

விக்கெட் கீப்பிங்கில் சதமடித்த காம்ரன் அக்மல்!

டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டம்பிங்ஸ் முறையில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் காம்ரன் அக்மல் படைத்துள்ளார்.

Kamran Akmal 1st wicketkeeper to affect 100 T20 stumpings

author img

By

Published : Oct 14, 2020, 5:02 PM IST

Updated : Oct 14, 2020, 5:07 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் காம்ரன் அக்மல். இவர் தற்போது பாகிஸ்தானின் உள்ளூர் டி20 தொடரான நேஷனல் டி20 கோப்பைத் தொடரில் சென்ட்ரல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இத்தொடரில் நேற்று (அக்.13) நடைபெற்ற சதர்ன் பாஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது, அப்துல் வாஹித் பங்கல்சாய் விக்கெட்டை காம்ரன் அக்மல் ஸ்டம்பிங்ஸ் முறையில் வீழ்த்தினார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டம்பிங்ஸ் முறையில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை காம்ரன் அக்மல் படைத்துள்ளார். இப்பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 84 ஸ்டம்பிங்ஸ்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி 34 ஸ்டம்பிங்ஸ்களுடன் முதலிடத்திலும், காம்ரன் அக்மல் 32 ஸ்டம்பிங்ஸ்களுடன் இரண்டாம் இடத்திலும், 29 ஸ்டம்பிங்ஸ்களுடன் மூன்றாமிடத்தில் வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமும் உள்ளனர்.

அதேபோல் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்த வரையில் மகேந்திர சிங் தோனி 123 ஸ்டம்பிங்ஸ்களுடன் முதலிடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா 99 ஸ்டம்பிங்ஸ்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : ரொனால்டோ சாதனையை தகர்த்த சூப்பர் ஸ்டார் நெய்மார்

Last Updated : Oct 14, 2020, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.