டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 20ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்பின் களமிறங்கிய திருச்சி அணியின் தொடக்க ஆட்டகாரர்கள், முரளி விஜய் மற்றும் முகுந்த் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இவர்கள் முதல் விக்கெட்டிற்கு 106 ரன்களை சேர்த்தபோது முகுந்து 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த முரளி விஜய் சதமடிப்பார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், 62 பந்துகளில் 99 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை சேர்த்தது. திண்டுக்கல் அணி சார்பில் ஜெகனாதன் கௌஷிக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டகாரர் நாராயணன் ஜெகதீசன் 60 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதனால் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
Jaggi 💯 and the home crowd erupt that followed! @Jagadeesan_200 #NammaPasangaNammaGethu #TNPL2019 #RTWvDD pic.twitter.com/D6nJvMJOPS
— TNPL (@TNPremierLeague) August 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jaggi 💯 and the home crowd erupt that followed! @Jagadeesan_200 #NammaPasangaNammaGethu #TNPL2019 #RTWvDD pic.twitter.com/D6nJvMJOPS
— TNPL (@TNPremierLeague) August 3, 2019Jaggi 💯 and the home crowd erupt that followed! @Jagadeesan_200 #NammaPasangaNammaGethu #TNPL2019 #RTWvDD pic.twitter.com/D6nJvMJOPS
— TNPL (@TNPremierLeague) August 3, 2019
திண்டுக்கல் அணியை சதமடித்து வெற்றி பெற செய்த நாராயணன் ஜெகதீசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது இவருடைய முதல் டிஎன்பிஎல் சதம் ஆகும்.