இந்தியாவில் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் செளரஷ்டிரா - பெங்கால் அணிகள் மோதின. இதில், சிறப்பாக விளையாடிய ஜெய்தேவ் உனாத்கட் தலைமையிலான செளரஷ்டிரா அணி ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.
இந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசிய அவர் 10 போட்டிகளில் 67 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில், ஏழு, ஐந்து விக்கெட்டுகள் அடங்கும்.
முதல்முறையாக ரஞ்சிக்கோப்பை வென்ற செளராஷ்டிரா அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், இந்தத் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய ஜெய்தேவ் உனாத்கட்டை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் எனக் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ரஞ்சிக்கோப்பை தொடரை வென்ற வென்ற செளராஷ்டிரா அணிக்கு எனது வாழ்த்துகள். குறிப்பாக இந்தத் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி 67 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜெய்தேவ் உனாத்கட் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெற வேண்டும்.
அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் தனது ஆட்டத்திறனை நிரூபித்துக்காட்டியுள்ளார். தற்போது ரஞ்சி தொடர் மூலம்தான் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: கொல்கத்தாவில் 19 ஆண்டுகளுக்குமுன் அரங்கேறிய டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிசயமும் சரித்திரமும்...!