இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி. இவர் ஜனவரி 2ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சையளிக்கப்பட்டது.
பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள கங்குலி, சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரால் ஐசிசியின் கூட்டங்களில் பங்கேற்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐயின் பிரதிநிதியாகச் செயலாளர் ஜெய் ஷா கலந்துகொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், “சவுரவ் கங்குலியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவருக்குப் பதிலாக ஐசிசி கூடங்களில் பிசிசிஐயின் பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 2021 டி20 உலகக்கோப்பை, 2023 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர்கள் இந்தியாவில் நடத்தப்படவுள்ளதால், பிசிசிஐக்கு வரிச்சலுகை அளிக்கும்படி மத்திய அரசிடம் செயலாளர் ஜெய் ஷா, பொருளாளர் அருண் துமல் ஆகியோர் பேசுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிட்னி இனவெறிக்கு எதிராக விராட் கோலி காட்டம்!