ETV Bharat / sports

‘நடப்பது அனைத்தும் அதிசயம் போல் உள்ளது’ - ஜஸ்பிரித் பும்ரா - மும்பை இந்தியன்ஸ்

சமீபத்தில் திருமணமான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனைவி சஞ்சனா கணேசனுடன் இருக்கும் க்யூட்டான சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Jasprit Bumrah thanks fans for love, shares photos with wife Sanjana

author img

By

Published : Mar 20, 2021, 10:59 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விளையாட்டு தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசன் திருமணம் கடந்த மார்ச் 15ஆம் தேதி கோவாவில் நடந்தது. இத்திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா கோவாவில் நடந்த திருமண அழைப்பின் ஓரிரு படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, கடந்த சில நாள்களாக நடப்பது அனைத்தும் அதிசயமாக உள்ளது. தனக்கும் தனது மனைவிக்கும் ரசிகர்கள் அளித்த அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார். பும்ராவின் இப்பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

  • The last few days have been nothing short of absolutely magical! We are so grateful for all the love & wishes we’ve received. Thank you. pic.twitter.com/dhWH918Ytu

    — Jasprit Bumrah (@Jaspritbumrah93) March 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, தனது திருமணத்திற்காக இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டெஸ்ட், டி20 தொடர், ஒருநாள் தொடரிலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெறவுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் பும்ரா இம்மாத இறுதியில் மும்பை அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆல் இங்கிலாந்து ஓபன்: அரையிறுதியில் சிந்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.