வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் பும்ரா எட்டு ஓவர்கள் வீசி ஏழு ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் பும்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முன்னதாக இந்திய முன்னாள் வீரர் வெங்கடபதி ராஜு இலங்கை அணிக்கு எதிராக 12 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியது சாதனையாக இருந்தது. தற்போது வெங்கடபதி ராஜு இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் உள்ளனர்.
மேலும் இதுவரை பும்ரா பயணம் செய்து ஆடிய அனைத்து வெளிநாட்டு தொடர்களிலும் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.