ETV Bharat / sports

அடுத்த சீசனில் ஆஸி. அணிக்கு டாடா காட்டிய முக்கிய வீரர்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்துவரும் ஜேசன் பெக்ரெண்டார்ஃப் முதுகெலும்பு அறுவைசிகிச்சை காரணமாக 2019/20 ஆகிய சீசனில் அணியிலிருந்து விலகியுள்ளார்.

Jason Behrendorff ruled out
author img

By

Published : Oct 8, 2019, 5:27 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் மிகக்குறுகிய காலத்தில் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வான நட்சத்திர வீரராக வலம் வந்தவர் ஜேசன் பெக்ரெண்டாரஃப். வேகப்பந்து வீச்சாளரான இவர் முதுகெலும்பு அறுவை சிகிச்சை காரணமாக 2019/20ஆம் ஆண்டிற்கான அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அறுவை சிகிச்சையைப் பற்றி யோசித்து வருகிறேன். இதேபோன்ற அறுவை சிகிச்சை செய்த பல ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுடன் நான் பேசியுள்ளேன். அவர்கள் அனைவரும் அறுவை சிகிச்சை முடிவுகள் பற்றி நல்ல விதமாகவே கூறியுள்ளனர். அதனால் அடுத்த சீசனில் அணியில் மீண்டும் இடம்பெறுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

2019/20ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய டி20 போட்டிகளுக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் அணியிலிருந்து விலயுள்ளது அந்த அணியின் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இதையும் படிங்க: ஸ்டீவ் ஸ்மித்: மூன்றரை வருடங்களுக்குப் பிறகு டி20 போட்டியில் ரீ - எண்ட்ரி !

Intro:Body:

Jason Behrendorff ruled out of 2019-20 season

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.