தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று செஞ்சுரியனில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் இங்கிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.
இப்போட்டி தொடங்கிய முதல் பந்திலேயே ஆண்டர்சன் விக்கெட் எடுத்து சாதனைப் பட்டியலில் இணைந்தார். அவர் தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கரின் விக்கெட்டைக் கைப்பற்றி கடந்த பத்து ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆண்டர்சன், ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் முதன்முறையாக மீண்டும் டெஸ்ட்டில் களமிறங்கினார். இன்று அவர் வழக்கம்போல் இங்கிலாந்து அணியின் முதல் ஓவரை வீசினார். அவர் லெக் ஸ்டெம்பிற்கு வெளியே வீசிய பந்தை டீன் எல்கர் லெக் திசையில் அடிக்க முற்பட்டார். ஆனால் பேட்டின் விளிம்பில் பட்ட பந்து கீப்பரிடம் நேராக சென்றது. இதனால் எல்கர் ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டர்சனின் சாதனைக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய பவுலர்கள்
பந்துவீச்சாளர் | ஆட்டமிழந்த பேட்ஸ்மேன் | மைதானம் | ஆண்டு |
ஸ்டெயின் (தெ.ஆ) | ஸ்ட்ராஸ் (இங்கிலாந்து) | ஜோகன்னஸ்பெர்க் | 2010 |
லக்மல் (இலங்கை) | கெயில்(வெஸ்ட் இண்டீஸ்) | பல்லேகெல்லே | 2010 |
ஸ்டார்க் (ஆஸி.) | கருணாரத்னே(இலங்கை) | கல்லே | 2016 |
லக்மல்(இலங்கை) | கே.எல். ராகுல்(இந்தியா) | கொல்கத்தா | 2017 |
ஆண்டர்சன் (இங்கி) | எல்கர் (தெ.ஆ) | செஞ்சுரியன் | 2019(இன்று) |
அது மட்டுமல்லாது இப்போட்டி ஆண்டர்சன் விளையாடும் 150ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் 150 டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும், சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் என்ற பெருமையையும் ஆண்டர்சன் பெற்றார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக், 161 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அந்நாட்டு அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் சச்சின் டெண்டுல்கர்(இந்தியா), டிராவிட் (இந்தியா), ஸ்டீவ் வாக் (ஆஸி.), ரிக்கி பாண்டிங் (ஆஸி.), ஆலன் பார்டர் (ஆஸி.), ஜாக் காலிஸ் (தெ.ஆப்பி), சிவ்நரைன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), அலஸ்டர் குக் (இங்கிலாந்து) ஆகியோரே 150க்கும் மேற்பட்ட டெஸ்ட்டில் பங்கேற்றுள்ளனர்.
-
🦁 An incredible achievement! Congratulations on 1️⃣5️⃣0️⃣ Test caps @jimmy9! 👏
— England Cricket (@englandcricket) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow Live: https://t.co/WVJCAgDDJo pic.twitter.com/f0gHPsZR8G
">🦁 An incredible achievement! Congratulations on 1️⃣5️⃣0️⃣ Test caps @jimmy9! 👏
— England Cricket (@englandcricket) December 26, 2019
Follow Live: https://t.co/WVJCAgDDJo pic.twitter.com/f0gHPsZR8G🦁 An incredible achievement! Congratulations on 1️⃣5️⃣0️⃣ Test caps @jimmy9! 👏
— England Cricket (@englandcricket) December 26, 2019
Follow Live: https://t.co/WVJCAgDDJo pic.twitter.com/f0gHPsZR8G
ஆண்டர்சன் கடந்த பத்து ஆண்டுகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு (564 விக்கெட்டுகள்) அடுத்தபடியாக 535 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: விஸ்டன்: 10 ஆண்டுகளில் ஐந்து சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை!