ETV Bharat / sports

இந்தியாவில் விளையாடியதை நினைவூட்டியது - காற்று மாசு குறித்து ஆஸி. வீரர்!

சிட்னியில் நடைபெற்ற ஷெஃப்பீல்ட் ஷீல்ட் போட்டியின்போது மைதானத்தில் நிலவியிருந்த காற்று மாசு, தனக்கு இந்தியாவில் விளையாடியதை போல் நினைவூட்டியது என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

Air quality
Air quality
author img

By

Published : Dec 11, 2019, 6:30 PM IST

ஆஸ்திரேலியாவில் கடந்த நில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத் தீயால் அங்குள்ள பெரும்பாலான நகரங்கள் புகை மண்டலமாகின. இதனால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்ற நியூ சவுத் வேல்ஸ் அணியின் மருத்துவக்குழு கூறியிருந்த நிலையில், குயின்ஸ்லாந்து - நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷெஃப்பீல்ட் ஷீல்ட் தொடரின் லீக் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

இப்போட்டியின் கடைசி ஆட்ட நாள் (ஐந்தாவது) தொடங்குவதற்கு முன்னதாக, சிட்னி மைதானம் முழுவதும் புகை மண்டலங்களால் சூழ்ந்துகொண்டது. காற்று மாசின் அளவு மிகவும் மோசமான நிலை எட்டினாலும், வேறு வழியில்லாமல் இரு அணி வீரர்களும் கடும் சிரமத்திற்கிடையே இப்போட்டியில் விளையாடினர். இப்போட்டியில் விளையாடியதைக் குறித்து ஆஸ்திரேலிய வீரரும், குயின்ஸ்லாந்து அணியின் கேப்டனுமான உஸ்மான் கவாஜா கூறுகையில்,

"நாங்கள் காலை மைதானத்துக்கு வருகை தரும்போது, இந்த காற்று மாசு எனக்கு இந்தியாவில் விளையாடியதை நினைவூட்டியது. மைதானத்தில் புகை மண்டலம் அதிகமாக இருந்ததால், மூச்சு விட மிகவும் சிரமமாக இருந்தது. காற்று மாசு மோசமான நிலையில்தான் இருந்தது என்றாலும், விளையாட முடியாத வகையில் ஒன்றும் இல்லை. அப்படி இருந்திருந்தால், நிச்சயம் ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கும்" என்றார்.

Air quality
சிட்னியில் ஏற்பட்ட புகை மண்டலம்

முன்னதாக, இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் வீரரும் ஆஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஸ்டீபன் ஓ கீஃப் பேசுகையில், "இந்தியாவை விடவும் இங்கு காற்று மாசின் அளவு மோசமாகதான் இருந்தது. இப்படியான சூழ்நிலையில் நான் விளையாடியதே இல்லை. எனக்கு குழந்தைகள் இல்லை. ஒரு வேளை இருந்திருந்தால், நானும் அவர்களுடன் ஜன்னல்களை அடைந்துக் கொண்டு போட்டியில் விளையாடாமல் வீட்டிலேயே இருந்திருப்பேன்" எனத் தெரிவித்தார்.

இப்போட்டியின் இறுதியில் நியூ சவுத் வேல்ஸ் அணி இப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், இத்தகைய சூழலில் வீரர்கள் விளையாடியது சமூகவலைதளங்களில் பேசுபொருளாய் மாறியது. முன்னதாக, இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியிலும் இரு அணி வீரர்களும் கடும் காற்று மாசு மத்தியில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://aninews.in/news/sports/cricket/air-quality-in-the-match-against-queensland-was-far-worse-than-in-india-steve-okeefe20191210211420/

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/air-quality-in-new-south-wales-was-far-worse-than-in-india-steve-okeefe/na20191211102529388

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.