கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு-வருகின்றன.
இந்நிலையில் வருகிற மே மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் தற்போது நிலவிவரும் சூழல் காரணமாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கலந்தாலோசித்து தொடரை ஒத்திவைக்க முடிவுசெய்யுமாறு ஐசிசி வேண்டுகோள்விடுத்திருந்தது.
இதனையடுத்து வங்கதேச கிரிக்கெட் வாரியம், அயர்லாந்து கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள், டி20 தொடரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் இத்தொடருக்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
-
The three-match ODI series between Ireland and Bangladesh has been postponed due to the COVID-19 pandemic.https://t.co/MwdAky3hF9
— ICC (@ICC) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The three-match ODI series between Ireland and Bangladesh has been postponed due to the COVID-19 pandemic.https://t.co/MwdAky3hF9
— ICC (@ICC) March 21, 2020The three-match ODI series between Ireland and Bangladesh has been postponed due to the COVID-19 pandemic.https://t.co/MwdAky3hF9
— ICC (@ICC) March 21, 2020
இது குறித்து அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் வாரன் டியூட்ரோம் கூறுகையில், "கோவிட்-19 பெருந்தொற்றின் தீவிரம் கண்டு அரசுகள், கிரிக்கெட் வாரியங்கள் அச்சத்தில் உள்ளன. இதனால் திட்டமிட்டபடி வங்கதேச - அயர்லந்து அணிகளுக்கான தொடர் நடத்த வாய்ப்பு இல்லை. ஆகையால் இத்தொடரின் ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியா-தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து-ஆஸ்திரேலியா, இலங்கை-இங்கிலாந்து, மேலும் பல உள்ளூர் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இன்சமாம் செய்த முதல் மேஜிக்கின் கதை!