இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார். கரோனா வைரஸ் பரவலால் ஐபிஎல் தொடரும் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று பல காலம் ஆகிவிட்டது. இதனால் தோனி குறித்து பல்வேறு வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தோனி குறித்து பேசுகையில், '' தோனி தனது கடைசி சர்வதேச போட்டியை இந்திய அணிக்காக மகிழ்ச்சியாக ஆடிவிட்டார் என்றே நினைக்கிறேன். அவரது கடைசி ஆட்டத்திலும், அவரை வீழ்த்தாதவரை ஆட்டம் பரபரப்பாகவே இருந்தது.
தோனி இன்னும் அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவிக்காததால் நாம் அனைவரும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஒருவேளை தோனி மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்க வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் என் பட்டியலில் அவர்தான் முதலிடத்தில் இருப்பார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஆட விரும்பினால், ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டம் பெரிதாக கணக்கில் கொள்ளப்படாது என்று நினைக்கிறேன்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தோனிக்கு ஃபிட்னெஸ் போச்சு; முன்ன இருந்த கெத்து இல்ல: ரோஜர் பின்னி!