ETV Bharat / sports

ஐபிஎல் 2020: பலமும் பலவீனமும்... மும்பை இந்தியன்ஸ்! - கரீபியன் ப்ரீமியர் லீக்

ஐபிஎல் வரலாற்றி 2008ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை மும்பை அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் அடுத்த ஏழு ஆண்டுகளில் நான்கு கோப்பைகளை வென்று, ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற அடைமொழியுடன் மும்பை அணி சுற்றி வருகிறது.

ipl-2020-will-mumbai-indians-be-able-to-complete-trophy-double

author img

By

Published : Sep 15, 2020, 10:21 PM IST

13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்போதே தங்களின் அணிகள் பற்றிய மீம்ஸ்கள், விமர்சனங்கள், ப்ளேயிங் 11 என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

2008ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் போட்டிகள், இந்த ஆண்டு கரோனாவால் செப், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இதனாலேயே இன்னும் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுபிட்டது.

ஐபிஎல் வரலாற்றி 2008ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை மும்பை அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் அடுத்த ஏழு ஆண்டுகளில் நான்கு கோப்பைகளை வென்று, ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற அடைமொழியுடன் மும்பை அணி சுற்றி வருகிறது.

ஆட் (odd) சீசன் என்றால் கோப்பை நிச்சயம் மும்பைக்குதான் என அந்த அணியின் ரசிகர்கள் பந்தயம் கட்டுவார்கள். ஆனால் இம்முறையோ ஈவன் (Even) சீசனிலும் கோப்பை எங்களுக்குதான் என ஆக்ரோஷமாக பேசி வருகின்றனர்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

அதற்கான காரணமும் இல்லாமல் இல்லை. ஏனென்றால் மற்ற அணிகளில் எல்லாம் எந்த ஆடுவார், எந்த வீரர் பெஞ்சில் அமர்வார் என்ற கேள்வி நீடித்து வரும் நிலையில், மும்பை அணிக்காக களம் காண உள்ள 9 வீரர்களை எளிதாக பட்டியலிட முடியும்.

தொடக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் களமிறங்கிய மும்பை அணிக்கு, இப்போதைய நிரந்திர கேப்டன் ரோஹித் ஷர்மாதான். மும்பை அணிக்காக 10ஆவது சீசனில் களமிறங்கவுள்ளார். நிச்சயம் டி காக் உடனான ஓபனிங் பேட்ஸ்மேன் ரோஹித்தான். அதனால் ஓபனிங் பிரச்னை சுலபமாக முடிந்துவிட்டது. மூன்றாவது வீரராக இளம் வீரர் இஷான் கிஷன், நான்காவது இடத்திற்கு கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய சூர்ய குமார் யாதவ், ஐந்தாவது இடத்தில் பொல்லார்ட், ஆறாவது இடத்தில் பாண்டியா, ஏழாவது இடத்தில் குருணால் பாண்டியா, எட்டாவது இடத்தில் நாதன் கவுல்டர்நைல், ஒன்பதாவது இடத்தில் பும்ரா, 10ஆவது இடத்தில் போல்ட், 11ஆவது இடத்திற்கு ராகுல் சஹார் என அணியின் ப்ளெயிங் லெவனை எளிதாக கணிக்கலாம்.

பொல்லார்ட்
பொல்லார்ட்

இவர்களில் யார் காயமடைந்தாலும் மும்பை அணிக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கான மாற்று வீரர்களும் தயாராவே உள்ளனர். ஆனால் இதுமட்டும் அந்த அணிக்கு வெற்றிகளைக் கொடுக்கவில்லை.

ஒரு அணியைக் கட்டமைக்க வேண்டுமென்றால் அந்த அணியின் கோர் (Core) வீரர்களை மாற்றக் கூடாது. இதனை முதன்முதலாக செயல்படுத்திய அணி சென்னை என்றாலும், இப்போது சென்னையை அணியையும் கடந்து சிறந்த கோர் குரூப்பை மும்பை அணி தன்னகத்தில் வைத்துள்ளது.

மும்பை அணிக்காக ஆடும் 11 வீரர்களுமே மேட்ச் வின்னர்கள்தான். ஒரு போட்டியில் ரோஹித் ஆடுவார், ஒரு போட்டியில் பாண்டியா ஆடுவார், ஒரு போட்டியில் பும்ரா வென்று கொடுப்பார்... இவர்கள் அனைவரும் ஏமாற்றினாலும் பொல்லார்ட் என்னும் ஆட்டநாயகனை கொண்டு மும்பை அணி வெற்றிபெறும். இவர் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணிக்கு திரும்பியுள்ளதால், நிச்சயம் பொல்லார்ட்டின் ஆட்டம் மும்பை அணிக்கு பெரும் சாதகம்தான்.

சென்னையை அணியைக் கடந்து மற்ற அணிகளைப் பார்த்தால் கேப்டன்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். டெல்லி அணிக்கு எல்லாம் 8க்கும் மேற்பட்ட கேப்டன்கள் ஆடியிருக்கிறார்கள். ஆனால் மும்பை அணிக்கு ரோஹித் மட்டும்தான். களத்தில் அவர் எடுக்கும் முடிவுகள், அப்படியே தோனியின் ஜெராக்ஸ் போல் இருக்கும். அதேபோல் மும்பை அணி எந்த வீரரையும் நம்பி இருக்காது. அதனால் தோல்வியடைந்தாலும் ரோஹித் ஷர்மா அந்த விரருக்கு இடம்கொடுத்துவிடுவார்.

குருணால் பாண்டியா
குருணால் பாண்டியா

வீரர்களில் மட்டுமல்ல பயிற்சியாளர்களிலும் மும்பை அணி நட்சத்திர பட்டாளத்தைதான் கொண்டுள்ளது. ஜாம்பவான் வீரர் ஜெயவர்தனே, ராபின் சிங், ஷேன் பாண்ட் என கிரிக்கெட்டின் நுணக்கங்களை சரியாக புரிந்து வைத்திருப்பவர்களைக் கொண்டுள்ளது.

instinct Captainship என்று ரோஹித் எடுக்கும் முடிவுகள் எப்போதும் மும்பை அணிக்கு வெற்றியைத்தான் பெற்றுக்கொடுத்துள்ளது. இவ்வளவு சாதகங்கள் உள்ளதால், மும்பை அணி கோப்பையைக் கைப்பற்றுமா என்று கேட்டால் அங்குதான் ஒரு சில பிரச்னைகள் இந்த ஆண்டில் உள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்தால் பாதி நேரம் பயணங்களிலேயே வீரர்களுக்கு சென்றுவிடும். பன்முகத் தன்மைக்கொண்ட நாட்டில் கிரிக்கெட் மைதானங்களும் பன்முகங்களோடு இருக்கும். ஆனால் இம்முறையோ மூன்றே மைதானங்கள்தான், மைதானத்தின் தன்மையும் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமானது. ஒவ்வொரு ஆண்டிலும் பந்துவீச்சில் முதல் நான்கு ஓவர்களும், கடைசி நான்கு ஓவர்களும் பும்ரா, மலிங்காதான் வீசுவார்கள்.

இந்த ஆண்டு தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக மலிங்கா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக போல்ட் அல்லது மெக்லனகன் களமிறங்குவார். ஐபிஎல் தொடர்களில் இதுவரை போல்ட் ஆடியிருந்தாலும் , இறுதி ஓவர்கள் என்று வந்தால் ரன்களை மட்டுமே வாரி வழங்கியுள்ளார். அதனால் பும்ரா மீதான சுமை அதிகமாகியுள்ளது.

பும்ரா
பும்ரா

அதுமட்டுமல்லாமல் ராகுல் சஹார், ஜெயந்த் யாதவ், குருணால் பாண்டியா ஆகிய மூவர்தான் சுழற்பந்துவீச்சாளர்கள். அரபு மைதானங்களில் இவர்களின் சுழற்பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே சில வெற்றிகள் அமையும்.

ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து எந்த அணியிம் கோப்பையைக் கைப்பற்றியதில்லை. ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அந்த சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!

இதையும் படிங்க: ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமும்...! - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.