ETV Bharat / sports

வில்லியம்சனின் கேட்சை பிடித்திருந்தால் நாங்க ஜெயித்திருக்கலாம் - தோல்வி குறித்து கோலி - எலிமினேட்டர் போட்டி

அபுதாபி: கேன் வில்லியம்சனின் கேட்சை பிடித்திருந்தால், ஆட்டத்தின் போக்கே மாறி இருக்கும் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அந்த கேட்ச பிடிச்சு இருந்தா…. நாங்க ஜெயிச்சி இருக்க வாய்ப்பு இருக்கு- தோல்வி குறித்து கோலி

author img

By

Published : Nov 7, 2020, 11:57 AM IST

ஐக்கிய அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (நவ.6) அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'எலிமினேட்டர்' போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தகுதி சுற்று போட்டிக்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் அணி வீரர் கேன் வில்லியம்சன் ஐபிஎல் போட்டிகளில் தனது 14 ஆவது அரை சதத்தை பதிவுசெய்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

போட்டியின் முடிவில்ப பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, “வில்லியம்சனின் கேட்சை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும். முதல் இன்னிங்சில் நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. இருந்தபோதிலும் சிறப்பான முறையில் பந்துவீசி போட்டியை இறுதிவரை கொண்டு சென்றோம்.

முதல் இன்னிங்சில் எதிரணி பந்து வீச்சாளர்களை நாங்கள் நெருக்கடிக்கு ஆளாக்கவில்லை. கடந்த ஐந்து போட்டிகளில் சரிவர விளையாடவில்லை. பேட்ஸ்மேன்கள் எளிதாக ஆவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இளம் வீரர் படிக்கல் 400க்கும் அதிகமான ரன்களை எடுத்தது வரவேற்கத்தக்கது. சாஹல், டிவில்லர்ஸ் வழக்கம் போல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்ற வீரர்கள் அவ்வப்போது நன்றாக விளையாடினாலும், பலர் ஏமாற்றத்தை அளித்தனர்.

இந்தியாவிற்கு வெளியே அனைத்து போட்டிகளும் நடைபெற்றது பெரும் சவாலாக இருந்தது. எங்களது அணிக்கு உறுதுணையாக இருந்து ஆதரித்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.