ETV Bharat / sports

ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமும்...! - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் தொடரில் இருமுறை கோப்பையைக் கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையில் மீண்டுமொரு ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கிறது.

IPL 2020: Dinesh Karthik & Co. must up the ante to break final barrier

author img

By

Published : Sep 14, 2020, 7:08 PM IST

2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி கண்ட பெருமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியைச் சேரும். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல. தன்னை எதிர்த்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 82 ரன்களுக்குள் சுருட்டி, 140 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியது.

கேகேஆர் போட்டி அட்டவணை
கேகேஆர் போட்டி அட்டவணை

இதனாலேயே கேகேஆர் அணிக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவான கதையும் உண்டு. இதுவரை நடைபெற்றுள்ள 12 ஐபிஎல் சீசன்களிலும் பங்கேற்றுள்ள கேகேஆர் அணி, 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

கேகேஆர் போட்டி அட்டவணை
கேகேஆர் போட்டி அட்டவணை

அதனையடுத்து நடைபெற்ற ஐந்து சீசன்களில் மூன்று முறை (2016,2017,2018) பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய கேகேஆர் அணி, இருமுறை (2015, 2019) லீக் சுற்றுகளோடே வெளியேறியது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றியை பெற்ற கேகேஆர், அணியில் ஏற்பட்ட குழப்பத்தினாலும், வீரர்களிடையே ஏற்பட்ட மோதல்களாலும் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவி பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பல மாற்றங்களைத் செய்துள்ள கேகேஆர் அணி, தனது மைதானத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கேகேஆர் அணியின் பிரதான மைதானமாக ஈடன் கார்டன்ஸ் மைதானம் இருந்து வருகிறது. வழக்கமாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தை, ஐபிஎல் போட்டிகளினால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றியமைத்தனர்.

அதனால்தான் என்னவோ பாட் கம்மின்ஸை யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் ரூ. 15.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கேகேஆர். இது 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் மற்றொரு வேகப்புயலான லோக்கி ஃபர்குசனையும் தன் வசப்படுத்தியது கேகேஆர். இவர்கள் இருவரும் சராசரியாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன் படைத்தவர்கள்.

பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்

கேகேஆர் அணிக்கு வந்த சோதனையோ என்னவோ, கரோனா வைரஸ் தொற்றால் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது, பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஐக்கிய அரபு மைதானங்கள் அனைத்தும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படக் கூடியவை. இதில் கேகேஆர் அணியின் வேகம் எந்தளவு பலனை அளிக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இயன் மோர்கன்
இயன் மோர்கன்

ஆனால் பந்துவீச்சு பகுதியில் சொதப்பலைச் சந்தித்திருந்தாலும், பேட்டிங் பகுதியில் கேகேஆர் அணிக்கு இணை அந்த அணியே. இயன் மோர்கன், டாம் பான்டன் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்கும் திறன் கொண்ட வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுடன், தினேஷ் கார்த்திக், நித்திஷ் ராணா, சுப்மன் கில் போன்ற இந்திய பேட்ஸ்மன்களும் அணிக்கு வெற்றியை பெற உதவியாக இருப்பர்.

இவர்களைத் தாண்டியும் கேகேஆர் அணிக்கு துருப்புச்சீட்டாக விளங்குபவர்கள் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல், மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன். இந்த இருபெரும் ஆட்டக்காரர்களை கொண்டே கேகேஆர் அணி எதிரணிக்கு சவால் விடும் என்பது நிதர்சன உண்மை.

சுனில் நரைன்
சுனில் நரைன்

அதேபோல் கேகேஆர் அணியின் மற்றொரு பலமாக முன்னாள் அதிரடி வீரர் பிரண்டன் மெக்குலமை தங்களது தலமை பயிற்சியாளராகவும் கேகேஆர் இந்தாண்டு நியமித்திருப்பதன் மூலம் அணியின் வெற்றி வாய்ப்பானது பெருமளவு உயர்ந்துள்ளது. அதேசமயம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சவாலளிக்கும் தினேஷ் கார்த்திக் போன்ற இந்திய வீரர் தலைமையில் கேகேஆர் இந்தாண்டும் களமிறங்கவுள்ளதால், கொல்கத்தா அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கேகேஆர் அணியின் பலம்:

கொல்கத்தா அணியின் முக்கிய பலமாக கருதப்படுவர்கள் கேப்டன் தினேஷ் கார்த்திக், இளம் வீரர் சுப்மன் கில், ஆல் ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன். இவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே, கேகேஆர் அணிக்கு வெற்றியானது உறுதி.

அண்ட்ரே ரஸ்ஸல்
அண்ட்ரே ரஸ்ஸல்

அதேபோல் துணைக்கேப்டன் இயன் மோர்கன், டாம் பான்டன் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டு வீரர்கள் அணியில் இடம்பிடித்திருப்பது கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. அவர்களுடன் இளம் அதிரடி வீரர்கள் சுப்மன் கில், நித்தீஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி போன்ற இளம் வீரர்களின் பங்களிப்பும் பெரும் பலத்தை கொடுத்துள்ளது.

சுப்மன் கில்
சுப்மன் கில்

பேட்டிங்கில் வலுபெற்றுள்ளதைப் போலவே பந்துவீச்சிலும் தமது ஆதிக்கத்தை கேகேஆர் அணி புகுத்தியுள்ளது. பாட் கம்மின்ஸ், லோக்கி ஃபர்குசன் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பதனால் கேகேஆர் அணி வெற்றி பெறும் வாய்ப்புகளை பிரகாசப்படுத்தியுள்ளது. அவர்களுடன் சுழலில் கலக்கும் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோரின் பங்களிப்பும் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கேகேஆர் அணியின் பலவீனம்:

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு ஏற்றவாறு வீரர்களைத் தேர்வு செய்த கேகேஆர் அணி, மற்ற மைதானங்களில் சிறப்பாக செயல்படும் திறன் பெற்ற வீரர்களை தவறவிட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அலி கான்
அலி கான்

ஐக்கிய அரபு மைதானங்களில் அதிவேகப் பந்துவீச்சாளர்களின் தேவையானது எந்தளவு மாற்றத்தைக் கொடுக்கும் என்பது ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே தெரியவரும். அதேசமயம் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், சுனில் நரைன் அணிக்கு பலமாக கருத்தப்பட்டாலும், காயம் காரணமாக இவர்களில் யாரேனும் ஒருவர் இடம்பெறாமலிருந்தால் கூட, கேகேஆர் அணிக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

என்னதான் அணியில் வருண் சக்கரவர்த்தி, சித்தார்த் போன்ற மாற்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், அனுபத்தின் அடிப்படையில் அவர்களது செயல்முறை எவ்வாறு இருக்கும் என்பதனை கேகேஆர் அணி போட்டியின் போதே பார்க்க முடியும். தற்போது கொல்கத்த அணிக்குள்ள மிகப்பெரும் பின்னடைவாக சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

அதனைவிட தொடரின் போது அணியிலுள்ள வீரர்கள் காயம் காரணமாக வெளியேறாமல் இருந்தால், அது கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்திட்ட உறுதிப்படுதும் என்பது ரசிகர்களின் கருத்து. கேகேஆர் மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றுமா? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்...!

கேகேஆர் அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), இயன் மோர்கன், சுப்மான் கில், டாம் பான்டன், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, குல்தீப் யாதவ், பாட் கம்மின்ஸ், பிரசீத் கிருஷ்ணா, லாக்கி ஃபர்குசன், ரிங்கு சிங் , கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி, நிகில் நாயக், கிறிஸ் கிரீன், சித்தார்த், சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி, சித்தேஷ் லாட்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமூம்...! சென்னை சூப்பர் கிங்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.