ETV Bharat / sports

‘அங்கு தோனி இருக்கிறார்; ஜாக்கிரதையாக பந்துவீசுங்கள்’ - இர்பான் வார்னிங்! - ஐபிஎல் 2020

ஐபிஎல் தொடரில் தோனி களமிறங்குவார் என்பதால், அவருக்கு பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஆலோசனை வழங்கியுள்ளார்.

IPL 13: Bowlers will have to be careful while facing Dhoni, warns Pathan

author img

By

Published : Aug 17, 2020, 10:33 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி, கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இருப்பினும் அவர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஐபிஎல் தொடரில் தோனிக்கு பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய இர்பான் பதான், “ஐபிஎல் தொடரில் தோனி நிச்சயம் களமிறங்குவார் என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பந்துவீச்சாளர்கள், இந்த ஐபிஎல் தொடரில் தோனிக்கு பந்துவீசாததை எண்ணி மகிழ்ந்திருப்பார்கள்.

எப்படி இருந்தாலும் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை மிகவும் விரும்புவார். அதனால் இந்தத் தொடரில் தோனிக்கு பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் தற்போது தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தக் காத்துக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஓய்வை அறிவித்த தோனி, சென்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரிலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விலகியிருந்தார். தற்போது அவர் ஒரு வருடத்திற்கு பின் ஐபிஎல் தொடர் மூலமாக கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்பதால், தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தோனி & ரெய்னா ஓய்வு: மணல் சிற்பத்தில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.