இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
-
West Indies have won the toss and will bowl first in the 1st ODI. #INDvWI #TeamIndia pic.twitter.com/TE8GKqy4T4
— BCCI (@BCCI) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">West Indies have won the toss and will bowl first in the 1st ODI. #INDvWI #TeamIndia pic.twitter.com/TE8GKqy4T4
— BCCI (@BCCI) December 15, 2019West Indies have won the toss and will bowl first in the 1st ODI. #INDvWI #TeamIndia pic.twitter.com/TE8GKqy4T4
— BCCI (@BCCI) December 15, 2019
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் சிவம் துபேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதன் மூலம், ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் இப்போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த முறை 2017இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கோலி டக் அவுட்டாகி, சென்னை ரசிகர்களை ஏமாற்றினார். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி ஒன்பது ஒருநாள் போட்டிகளில் அவர் ஆறு சதம், ஒரு அரைசதம் என மொத்தம் 870 ரன்கள் குவித்து சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் அவர், இன்றைய ஆட்டத்திலும் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 22 ஒருநாள் போட்டிகள் நடைபெற்ற நிலையில், 13 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளன. இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஏனைய ஏழு ஆட்டங்களில் சேஸிங் செய்து அணிகள் வென்றுள்ளன.
இதில், இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய 13 போட்டிகளில், எட்டு வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. மறுமுனையில், வெஸ்ட் இண்டீஸ் அணி சென்னை மைதானத்தில் இதுவரை ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில், ஒருமுறை மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. ஏனைய ஐந்து ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி மண்ணை மட்டுமே கவ்வியுள்ளது.
இந்திய அணி: கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சிவம் துபே, ஜடேஜா, தீபக் சஹார், குல்தீப் யாதவ், முகமது ஷமி
வெஸ்ட் இண்டீஸ் அணி: பொல்லார்டு (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், ஷாய் ஹோப், ரோஸ்டான் சேஸ், ஷிம்ரான் ஹெட்மயர், நிக்கோலஸ் பூரான், ரொமாரியோ ஷேபர்டு, ஜேசன் ஹோல்டர், ஹெய்டன் வால்ஷ், கீமோ பவுல், அல்சாரி ஜோசஃப்
இதையும் படிங்க: ட்விட்டரிலும் தோனியை விட்டுவைக்காத விராட் கோலி!