இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தலா மூன்று டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் மூலம், இந்திய அணியை 50ஆவது முறையாக வழிநடத்தும் இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
-
Toss Time: #TeamIndia have won the toss and will bat first #INDvSA @Paytm pic.twitter.com/AESOB3pDdF
— BCCI (@BCCI) October 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Toss Time: #TeamIndia have won the toss and will bat first #INDvSA @Paytm pic.twitter.com/AESOB3pDdF
— BCCI (@BCCI) October 10, 2019Toss Time: #TeamIndia have won the toss and will bat first #INDvSA @Paytm pic.twitter.com/AESOB3pDdF
— BCCI (@BCCI) October 10, 2019
இதையடுத்து இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளஸ்ஸிஸ் தொடர்ந்து ஆறாவது முறையாக வெளிநாட்டு மண்ணில் டாஸில் தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்திய அணியில் அனுமா விஹாரிக்குப் பதிலாக பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணியில் டேன் பீட்டெட்டுக்கு பதிலாக அன்ரிச் நோர்டேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் விளையாடியதைப் போலவே இப்போட்டியிலும் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்களாக என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணி விவரம்: கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, சஹா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி
தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டீன் எல்கர், ஏய்டன் மார்க்ரம், டீ ப்ரூயின், டெம்பா பவுமா, டூபிளஸ்ஸிஸ், டி காக், சீனுராம் முத்துசாமி, வெர்னான் ஃபிலாண்டர், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்டே