ETV Bharat / sports

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு - India vs bangladesh

வங்கதேச அணிக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

indian squad
author img

By

Published : Oct 24, 2019, 6:34 PM IST

வங்கதேச அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்களில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வங்கதேச தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் அடங்கிய இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணியின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதில் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 அணியில் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் விளாசிய சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருப்பதால் இளம் ஆல்-ரவுண்டரான சிவம் துபேவுக்கு முதன்முறையாக இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. ஜடேஜா விடுவிக்கப்பட்ட நிலையில், ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலககோப்பை தொடருக்குப்பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று தொடர்களையும் கைப்பற்றியது. அதன்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை டிரா செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என வென்றது.

இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 240 புள்ளிகளுடன் சிம்ம சொப்பனமாக முதலிடத்தில் நீடிக்கிறது. அதே போன்று வங்க தேச அணிக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டெஸ்ட் அணியில் கேப்டன் கோலியே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக நீக்கப்பட்ட குல்தீப் யாதவ் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா வங்கதேசம் அணிகளுக்க இடையேயான டி20 தொடர் அட்டவணை

போட்டி இடம் நாள்
முதல் டி20 டெல்லி நவம்பர் 3
இரண்வடாது டி20 ராஜ்கோட் நவம்பர் 7
மூன்றாவது டி20 நாக்பூர் நவம்பர் 10

டெஸ்ட் அட்டவணை

போட்டி இடம் நாள்
முதல் டெஸ்ட் இந்தூர் நவம்பர் 14 - 18
இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா நவம்பர் 22 - 26

டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா, சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, சிவன் துபே, ஷ்ரத்தல் தாக்கூர்

டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, அஜிங்கியா ரகானே, ஹனுமா விஹாரி, சாஹா (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், மொகம்மது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட்

Intro:Body:

India squad for Test and T20I against Bangladesh announced

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.