இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், ஜஸ்பித் பும்ரா இருவரையும் மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் இனரீதியாக இழிவுபடுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அலுவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்த விவகாரம் குறித்து ஐசிசி உறுப்பினர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் பும்ரா, சிராஜ் இருவரிடமும் நடந்தவற்றை கேட்டறிந்தனர். அப்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அஜிங்கிய ரஹானே மற்றும் இந்திய அணியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆண்ட்ரூ சைமன்ஸ் புகார்
கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என்று அழைத்ததாக ஆண்ட்ரூ சைமன்ஸ் குற்றஞ்சாட்டி இருந்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டை இந்திய அணி மறுத்திருந்தது.
இதையும் படிங்க:3ஆவது டெஸ்ட்: தொடக்கத்தில் தடுமாறிய ஆஸி., புத்துணர்ச்சி தந்த ஸ்மித், லபுசாக்னே!