ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸுக்கு கோலியின் தரமான செய்கை!

author img

By

Published : Dec 6, 2019, 11:00 PM IST

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கோலியின் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றிபெற்று 1-0 என்று முன்னிலை பெற்றது.

India won the first t20 against West Indies

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது.

இரு அணிகளிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் நிறைந்திருந்ததால் இன்றைய ஆட்டத்திலும் அனல் பறந்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர் லிவிஸ் அதிரடியாக ஆட, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சிம்மன்ஸ் 2 ரன்களில் துரதிருஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்தியப் பந்துவீச்சாளர்களை திணறடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் விக்கெட்டை எளிதில் எடுத்தாலும், இரண்டாவது விக்கெட்டை எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி 64 ரன்களை எடுத்துவிட்டது. சிறப்பாக விளையாடிய லிவிஸ் 40 ரன்களில் வெளியேறினார். அடுத்த விக்கெட்டையாவது எளிதில் எடுத்துவிடலாம் என்று எண்ணிய இந்திய அணியை நிலைகுலையச் செய்து நங்கூரமாக நிலைத்து ஆடினார் இளம்வீரர் ஹெட்மைர்.

சிறப்பாக விளையாடிய பிராண்டன் கிங் 31 ரன்களில் வெளியேற, கேப்டன் பொல்லார்டுடன் கைகோர்த்தார் ஹெட்மைர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். ஆனால், அடுத்தடுத்து இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல். எனினும், ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் கடைசி நேரத்தில் மட்டையை சுழற்றி பந்தை சிதறடித்தார். முடிவில், அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.

ஆர்ப்பரிப்பில் சாஹல்
ஆர்ப்பரிப்பில் சாஹல்

கடினமான இலக்கை எதிர்த்து ஆட வந்த இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் சர்மா 8 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இருப்பினும், கேப்டன் கோலியோடு ஜோடி சேர்ந்த ராகுல், நாலாபுறமும் பந்தை அடித்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு கொடுத்த தலைவலியை ஒற்றை ஆளாக அந்த அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்தார்.

1000 ரன்களை கடந்த ராகுல்
1000 ரன்களை கடந்த ராகுல்

அதிரடியாக ஆடி அரை சதம் அடித்த ராகுல், 62 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன்மூலம், டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ராகுல் பெற்றார். ராகுல் சென்ற பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய கேப்டன் கோலி அரை சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை எரிச்சலடைய செய்தார்.

பந்தை விளாசும் கேப்டன் கோலி
பந்தை விளாசும் கேப்டன் கோலி

வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்த ரிஷப் பந்த் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் கோலி 94 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெறவைத்தார். கோலியின் அதிரடியால் 18.4 ஓவர்களிலே நிர்ணயித்த இலக்கை எட்டிப் பிடித்து இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இதையும் படிங்க: இங்கிலாந்தின் ஆஷஸ் நாயகன் மரணம்

Intro:Body:

INDvsWI Match UPDATE

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.