இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்னில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆனால் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி பும்ரா, அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
-
First ball of the day and a review! 🤔
— ICC (@ICC) December 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
But Cheteshwar Pujara survives as replays show he didn't nick Pat Cummins to Tim Paine.
An exciting second day is certainly underway! #AUSvIND SCORECARD ▶️ https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/6TX06LFnj0
">First ball of the day and a review! 🤔
— ICC (@ICC) December 26, 2020
But Cheteshwar Pujara survives as replays show he didn't nick Pat Cummins to Tim Paine.
An exciting second day is certainly underway! #AUSvIND SCORECARD ▶️ https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/6TX06LFnj0First ball of the day and a review! 🤔
— ICC (@ICC) December 26, 2020
But Cheteshwar Pujara survives as replays show he didn't nick Pat Cummins to Tim Paine.
An exciting second day is certainly underway! #AUSvIND SCORECARD ▶️ https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/6TX06LFnj0
பின்னர் 72.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுசாக்னே 48 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. தொடக்க ஆட்டகாரான மயாங்க் அகர்வால் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து இந்திய அணியின் சுப்மன் கில் 28 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் இன்று(டிச.27)இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில் அரைசமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில், டிம் பெய்னிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாராவும் 17 ரன்களில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - ஹனுமா விஹாரி இணை எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து வருகிறது.
இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 90 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 10 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: சென்னை எஃப்சி - கிழக்கு வங்கம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சமன்