ETV Bharat / sports

#INDvsRSA2019: தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா! - சமனில் முடிக்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்கா! - மூன்றாவது டி-20

பெங்களூரு: இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 இன்று பெங்களூருவில் நடக்கவிருக்கிறது.

#INDvsRSA2019
author img

By

Published : Sep 22, 2019, 2:07 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வென்று 1-0 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று மாலை ஏழு மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானதில் போட்டி நடக்கவிருப்பதால் இன்றையப் போட்டியைக் காண ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களம் காணவுள்ள கோலி & கோ பேடிங்கில் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரையும், பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, சஹார் போன்றவர்களையும் கொண்டு வெறித்தனமான ஃபார்மில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரையில் புதிய கேப்டன் வியூகம் அவர்களுக்குப் பலிக்கவில்லை. இருந்தாலும் பவுமா, வெண்டர் டவுசன், மில்லர் போன்றவர்கள் பேட்டிங்கிலும், ரபாடா, நார்ட்ஜே ஆகியோர் பந்துவீச்சிலும் மிரட்டுவார்கள் என எதிர்பார்கலாம். ஏனேனில் இப்போட்டியில் தேல்வியடைந்தால் தென்னாப்பிரிக்க அணி தொடரை இலக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

உத்தேச அணி விவரம்:

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கே), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், ஹர்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா/ ராகுல் சஹார், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சஹார், நவ்தீப் சைனி.

தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான்டெர் டௌசன், டெம்பா பவுமா, டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜூனியர் தலா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.

இதையும் படிங்க: #INDvSA: மீண்டும் மொகாலியில் கோலியின் கிளாசிக் ஃபினிஷ்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.