ETV Bharat / sports

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடத்தில் இந்தியா! - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

India
author img

By

Published : Aug 27, 2019, 9:03 PM IST

டெஸ்ட் போட்டிகளை மேம்படுத்தும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் உள்ளிட்ட ஒன்பது அணிகள் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளன. ஆக, மொத்தம் 27 தொடர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு தொடருக்கும் மொத்தம் 120 புள்ளிகள் வழங்கப்படும். அந்தத் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் உள்ளதோ அதற்கு ஏற்றார் புள்ளிகள் பிரிக்கப்பட்டு அணிகளுக்கு வழங்கப்படும். இதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

-icc-test-championship
இலங்கை - நியூசிலாந்து

இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒருநாளில் மூன்று டெஸ்ட் போட்டி நடைபெற்றன. ( இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி)

இதில், நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்று சமனில் முடிந்தது. இதனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துகொண்டன.

-icc-test-championship
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ்

அதேபோல், இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

-icc-test-championship
வெற்றிபெற்ற மிகழ்ச்சியில் இந்திய வீரர்கள்

இதனால், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், இந்தியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா 60 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியா 32 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து அணியும் 32 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.

-icc-test-championship
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் வழங்கும் முறைகள்

ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர். அதேசமயம், இலங்கை - நியூசிலாந்து, இந்தியா - வெஸ்ட் அணிகளுக்கு இடையிலான தொடர், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர். இதனால்தான், புள்ளிகள் வழங்குவதில் மாற்றங்கள் இருக்கின்றன.

Intro:Body:

India spot No 1 Test ranking

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.