கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றன. இப்பெருந்தொற்றினால், ஒலிம்பிக் தொடர், கால்பந்து தொடர்கள், கிரிக்கெட் தொடர்கள் என அனைத்து வகையான சர்வதேச விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பல நாடுகள் வைரஸின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவது ஊரடங்கு உத்தரவுகளையும் அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு நியூசிலாந்தில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இதுவரை சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் தகுதிபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க தேவையான அனுமதியை அரசிடம் பெறமுடியவில்லையென பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் கைவிடப்பட்டுள்ளது.
அதேசமயம், கரோனா வைரஸ் தொற்றால் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது வரை நடைபெற்றுள்ள ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அடிப்படையில், முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் 2021ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதாக சர்வதேச கிரிக்கெட் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் 37 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய முதலிடத்திலும், இரண்டாமிடத்தில் 29 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும், 25 புள்ளிகளைப் பெற்று தென் ஆப்பிரிக்க அணியும், 23 புள்ளிகளுடன் இந்திய அணியும் நேரடியாக தகுதிப்பெற்றுள்ளன.
-
UPDATE🚨: India qualify for the ICC Women’s Cricket World Cup 2021 to be played in New Zealand. #TeamIndia
— BCCI Women (@BCCIWomen) April 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details: https://t.co/K8692jvQsK pic.twitter.com/OL5i4nbEHA
">UPDATE🚨: India qualify for the ICC Women’s Cricket World Cup 2021 to be played in New Zealand. #TeamIndia
— BCCI Women (@BCCIWomen) April 15, 2020
Details: https://t.co/K8692jvQsK pic.twitter.com/OL5i4nbEHAUPDATE🚨: India qualify for the ICC Women’s Cricket World Cup 2021 to be played in New Zealand. #TeamIndia
— BCCI Women (@BCCIWomen) April 15, 2020
Details: https://t.co/K8692jvQsK pic.twitter.com/OL5i4nbEHA
மேலும் இந்தப் பட்டியலில் பாகிஸ்தான்(19), நியூசிலாந்து(17), வெஸ்ட் இண்டீஸ்(13), இலங்கை(05) என்ற அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. மேலும் வங்கதேசம், அயர்லாந்து அணிகளும் ஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்றுள்ளதால் அந்த அணிகள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கோவிட்-19 விழிப்புணர்வு: காவலர்களுடன் கை கோர்த்த சாம்சன்!