ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை அடிலெய்டில் நடக்கிறது.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வீரரான ரிஷப் பந்த், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரிக்கும் இப்போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்கள் தரப்பில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவுடன் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பிடித்துள்ளார்.
-
UPDATE🚨: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">UPDATE🚨: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020UPDATE🚨: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020
இந்திய அணி: விராட் கோலி (கே), மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
இதையும் படிங்க:ஹைதராபாத் அணியின் இயக்குநராக டாம் மூடி நியமனம்!