ETV Bharat / sports

இர்ஃபான், கோனி அதிரடி வீண்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி!

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

India Legends lost to England Legends
India Legends lost to England Legends
author img

By

Published : Mar 9, 2021, 11:00 PM IST

சாலைப் பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் ராய்பூரில் நடைபெற்றுவருகிறது. இன்று (மார்ச் 9) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி, கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியுடன் மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்து. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

இருப்பினும் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் கெவின் பீட்டர்சன் 37 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டர்களை விளாசி 75 ரன்களை குவித்தார். இந்திய அணி தரப்பில் யூசுப் பதான் 3 விக்கெட்டுகளையும், இர்ஃபான் பதான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் 6 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சச்சின் டெண்டுல்கர் (9), முகமது கைஃப்(1), யுவராஜ் சிங் (22), பத்ரிநாத் (8), யூசுப் பதான் (17) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த இர்ஃபான் பதான் - மன்பிரீத் கோனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இர்ஃபான் பதான் அரைசதம் அடித்து மிரட்டினார்.

தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியில் மிரட்ட, கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 38 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ட்ரெம்லெட் வீசிய 19ஆவது ஓவரை எதிர்கொண்ட கோனி, ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை விளாசி ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக்கினார்.

பின் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் செய்த இர்ஃபான் பதான் முதல் இரண்டு பந்துகளில் 4 ரன்களை சேர்த்து, மூன்றாவது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு நம்பிக்கையளித்தார். ஆனால் அடுத்த பந்தில் அவரால் ஒரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்த கோனி, ஓவரின் ஐந்தாவது பந்தை அடிக்க முயன்று தவறவிட்டார். பின் கடைசி பந்தில் அவரால் ஒரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய லெஜண்ட்ஸ் அணியால் 182 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் இர்ஃபான் பதான் 34 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்சர், 4 பவுண்டரிகள் என 61 ரன்களையும், மன்பிரீத் கோனி 16 பந்துகளில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி என 35 ரன்களையும் சேர்த்தனர்.

இதையும் படிங்க: '2048 ஒலிம்பிக் போட்டிகளை டெல்லியில் நடத்த திட்டம்' - கெஜ்ரிவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.