இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா பி ஆணி, இந்தியா சி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியின் தொடக்க வீரர்கள் பார்தீவ் பட்டேல் 14 ரன்களிலும், ருடுராஜ் கெய்க்வாட் ரன் ஏதுமில்லாமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின் இந்தியா பி அணியின் ஜெய்ஸ்வால், கேதார் ஜாதவ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர்.
இதில் சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர். இதில் ஜெய்ஸ்வால் 54 ரன்களிலும், ஜாதவ் 86 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின் இறுதியில் விஜய் சங்கர், கிருஷ்ணப்பா கௌதம் இணை அதிரடியாக விளையாடிது. இதில் விஜய் சங்கர் 45 ரன்களும், கௌதம் 35 ரன்களையும் சேர்த்தார்.
இதன் மூலம் இந்தியா பி அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 283 ரன்களை எடுத்தது. அதன் பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா சி அணியின் நட்சத்திர வீரர்கள் மய்ங்க் அகர்வால்(28), சுப்மன் கில்(1), சூர்யகுமார் யாதவ்(3), தினேஷ் கார்த்திக்(3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
-
CHAMPIONS!! 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) November 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
India B lift the #DeodharTrophy after beating India C. pic.twitter.com/iYCps3zPIF
">CHAMPIONS!! 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) November 4, 2019
India B lift the #DeodharTrophy after beating India C. pic.twitter.com/iYCps3zPIFCHAMPIONS!! 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) November 4, 2019
India B lift the #DeodharTrophy after beating India C. pic.twitter.com/iYCps3zPIF
அந்த அணியில் பிரியம் மட்டும் நிலைத்து ஆடி அரைசதமடித்தார். இறுதியில் இந்தியா சி அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா பி அணி சார்பில் நதீம் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியா பி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணியை வீழ்த்தி தியோதர் கோப்பையைக் கைப்பற்றியது.
இதையும் படிங்க: முதலாவது டி20: வரலாற்றை மாற்றி எழுதிய வங்கதேசம்; இந்திய அணியுடன் முதல் வெற்றி!