இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.
இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் வங்கதேச அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் இந்திய அணியை வங்கதேசம் முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் பல்வேறு தரப்பினரும் அணியின் பீல்டிங், பந்துவீச்சு குறித்த பல விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இன்றைய போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில் இன்றைய போட்டியில் இந்திய அணி தோற்கும் பட்சத்தில் தொடரை இலக்கும் மோசமான நிலையில் உள்ளது. இதில் வங்கதேச அணி வெல்லும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியுடன் முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி புதிய சாதனையை அது படைக்கவுள்ளது.
-
"We want our bench strength to be as strong as possible."
— ICC (@ICC) November 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
India captain Rohit Sharma said that despite losing the first #INDvBAN T20I, the focus would still be on testing the team's bench strength.
READ ⬇️https://t.co/lMafFWCavX pic.twitter.com/kkMFdAr7z7
">"We want our bench strength to be as strong as possible."
— ICC (@ICC) November 7, 2019
India captain Rohit Sharma said that despite losing the first #INDvBAN T20I, the focus would still be on testing the team's bench strength.
READ ⬇️https://t.co/lMafFWCavX pic.twitter.com/kkMFdAr7z7"We want our bench strength to be as strong as possible."
— ICC (@ICC) November 7, 2019
India captain Rohit Sharma said that despite losing the first #INDvBAN T20I, the focus would still be on testing the team's bench strength.
READ ⬇️https://t.co/lMafFWCavX pic.twitter.com/kkMFdAr7z7
இன்றைய போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சில் கண்டிப்பாக மாற்றங்கள் இருக்கும் என அணியின் கேப்டன் ரோஹித் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் முதல் டி20 போட்டியில் விளையாடிய அணி வீரர்களுக்கு தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது.
அதேபோல் வங்கதேச அணியை பொறுத்தவரை அணியில் எந்தவித மாற்றமுமின்றி இன்று களமிறங்கவுள்ளது. ஏனெனில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை படைத்த வீரர்களை மாற்றும் எண்ணம் எவருக்கும் இருக்காது.
உத்தேச அணி:
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், கிருனல் பாண்டியா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், கலீல் அகமது
வங்கதேசம்: லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், முகமது நைம், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா (கே), அஃபிப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிசூர் ரஹ்மான், அல்-அமீன் ஹொசைன்
இதையும் படிங்க: 'ஏன் 3ஆவது நடுவர் நோபால் பாக்கமாட்டாரா?'- முன்னாள் ஆஸி.வீரர் கில்கிறிஸ்ட்