ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதும் இந்தியா! - இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள ஏழாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.

Ind vs Wi t20 wc practice match
Ind vs Wi t20 wc practice match
author img

By

Published : Feb 18, 2020, 7:54 AM IST

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு பயிற்சி போட்டிகள் விளையாடிவருகின்றன. பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெறவிருந்த இந்திய அணியின் முதல் பயிற்சி போட்டி மழையால் ரத்தானது.

இந்நிலையில், இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஏழாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதேபோல், ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியும் இன்று நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 21ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இதையும் படிங்க: கோலியை 10ஆவது இடத்திற்கு தள்ளிய மோர்கன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.