இந்திய அணியின் கேப்டனாகவும், உலகின் ரன் மெஷின் என அழைக்கபடுபவருமான விராட் கோலி, கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை தன்வசப்படுத்தி வருகிறார். மேலும் இவர் கேப்டானாகவும் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் 56 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், அதிக ரன்கள் அடித்த வீரர்கள் தரவரிசையில் ஏழாவது இடத்திற்கு முன்னேறி புதிய சரித்திர சாதனையை படைக்கவுள்ளார்.
அந்த இடத்தில் இதுநாள் வரை தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவானான ஜாக்ஸ் காலீஸ் இருந்துவருகிறார். 328 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 11,579 ரன்களை குவித்து தன்வசம் வைத்துள்ளார். தற்போது விராட் கோலி 241 போட்டிகளில் பங்கேற்று 11, 524 ரன்களை சேர்த்துள்ளார். விராட் கோலி 56 ரன்களை அடித்தால், காலீசின் சாதனை முறியடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், 18,426 ரன்களுடன் முதலிடத்திலும், இலங்கை அணியின் சங்கக்காரா 14,234 ரன்களுடன் இரண்டாமிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 13,704 ரன்களுடன் மூன்றாமிடத்திலும் நீடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்று கோல்... மூன்று ரெட் கார்ட்! கால்பந்து போட்டியில் நடந்த சுவாரஸ்யம்