இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், தொடரை உயிர்ப்புடன் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஷமி, குல்தீப் ஆகியோருக்கு பதிலாக சைனி, சாஹல் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சாளர்கள் இஷ் சோதி, சாண்ட்னர் ஆகியோருக்கு பதிலாக அறிமுக வீரர் கைல் ஜேமிசன், மார்க் சேப்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி தொடரை வெல்வதற்காகவும், இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாலும் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ப்ரித்வி ஷா, மயாங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஜாதவ், ஜடேஜா, ஷர்துல் தாகூர், சாஹல், பும்ரா.
நியூசிலாந்து அணி விவரம்: டாம் லாதம் (கேப்டன்), நிக்கோல்ஸ், டாம் ப்ளெண்டல், கப்தில், மார்க் சேப்மான், ஜேம்ஸ் நீஷம், கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், டிம் சவுதி, ஹெமிஷ் பென்னட், ராஸ் டெய்லர்.
இதையும் படிங்க: முதல் போட்டி தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி; இந்தியா சொதப்பல்!