இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நேற்று முன்தினம்(மார்ச்.12) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (மார்ச்.14) தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோருக்குப் பதிலாக அறிமுக வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
-
Suryakumar Yadav and Ishan Kishan are set to make their first T20I appearances 🙌#INDvENG pic.twitter.com/1mXZJR5LGr
— ICC (@ICC) March 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Suryakumar Yadav and Ishan Kishan are set to make their first T20I appearances 🙌#INDvENG pic.twitter.com/1mXZJR5LGr
— ICC (@ICC) March 14, 2021Suryakumar Yadav and Ishan Kishan are set to make their first T20I appearances 🙌#INDvENG pic.twitter.com/1mXZJR5LGr
— ICC (@ICC) March 14, 2021
இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்),கே.எல். ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர்.
இங்கிலாந்து அணி: ஈயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், டாம் கரன், கிறிஸ் ஜோர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித்.
இதையும் படிங்க: விஜய் ஹசாரே: சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை