சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இன்னிங்ஸை நிறைவுசெய்தது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 161 ரன்களை குவித்தார்.
அதன்பின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அஸ்வினின் அபார பந்துவீச்சால் 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 195 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் சுப்மன் கில், ரோஹித் சர்மா, புஜாரா, ரிஷப் பந்த், ரஹானே, அக்சர் பட்டேல் ஆகியோர் ஜேக் லீச், மொயீன் அலி ஆகியோரது பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத் தடுத்தனர். ஒருமுனையில் விராட் கோலி தடுப்பாட்டத்தில் நிலைக்க, மறுமுனையில் அஸ்வின் பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
-
Lunch in Chennai 🍲
— ICC (@ICC) February 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
R Ashwin and Virat Kohli have taken India’s lead to 351.
How many more will the hosts add?#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/m8Ze2jDMmn
">Lunch in Chennai 🍲
— ICC (@ICC) February 15, 2021
R Ashwin and Virat Kohli have taken India’s lead to 351.
How many more will the hosts add?#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/m8Ze2jDMmnLunch in Chennai 🍲
— ICC (@ICC) February 15, 2021
R Ashwin and Virat Kohli have taken India’s lead to 351.
How many more will the hosts add?#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/m8Ze2jDMmn
இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 38 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்திய அணி 351 ரன்கள் முன்னிலையுடன் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
இதையும் படிங்க: Pak vs SA: பாபர், ரிஸ்வான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்!