இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை செப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 249 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மொயீன் அலி, ஜாக் லீச் ஆகியோரது சுழலில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தது.
இதில் ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷப் பந்த் என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தது.
-
R Ashwin has slammed his fifth Test hundred!
— ICC (@ICC) February 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
His brilliant innings has extended India’s lead beyond 450 👀#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/rD4fKTFQ7n
">R Ashwin has slammed his fifth Test hundred!
— ICC (@ICC) February 15, 2021
His brilliant innings has extended India’s lead beyond 450 👀#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/rD4fKTFQ7nR Ashwin has slammed his fifth Test hundred!
— ICC (@ICC) February 15, 2021
His brilliant innings has extended India’s lead beyond 450 👀#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/rD4fKTFQ7n
இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின்னர் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்டில் ஐந்தாவது சதத்தை நிறைவு செய்து அசத்தினார்.
பின்னர் 286 ரன்கள் எடுத்திருனத் நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 482 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
-
A sensational century from R Ashwin has helped India to 286.
— ICC (@ICC) February 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The hosts have set England a target of 482!#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/U5j7Q5QuVg
">A sensational century from R Ashwin has helped India to 286.
— ICC (@ICC) February 15, 2021
The hosts have set England a target of 482!#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/U5j7Q5QuVgA sensational century from R Ashwin has helped India to 286.
— ICC (@ICC) February 15, 2021
The hosts have set England a target of 482!#INDvENG ➡️ https://t.co/DSmqrU68EB pic.twitter.com/U5j7Q5QuVg
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 106 ரன்களையும், விராட் கோலி 62 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி, ஜேக் லீச் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: சர்ச்சை வழக்கில் சிக்கிய யுவராஜ்: 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!