இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 328 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்திருந்தது.
இதையடுத்து, இலக்கை நோக்கி இந்திய அணியில் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை களமிறங்கியது. இதில் இந்திய அணி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இன்று (ஜன.19) தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் சிறிது நேரத்திலேயே இந்திய அணியின் ரோஹித் சர்மா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார்.
-
That's two 5️⃣0️⃣s in three Tests for Shubman Gill 👏#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/jYtr96Pp6z
— ICC (@ICC) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">That's two 5️⃣0️⃣s in three Tests for Shubman Gill 👏#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/jYtr96Pp6z
— ICC (@ICC) January 19, 2021That's two 5️⃣0️⃣s in three Tests for Shubman Gill 👏#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/jYtr96Pp6z
— ICC (@ICC) January 19, 2021
மறுமுனையில் புஜாரா வழக்கம் போல் தனது தடுப்பாட்டத்தால் எதிரணி பந்துவீச்சாளர்களை கடுப்பாக்கி வருகிறார். இதன் மூலம் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை எடுத்துள்ளது.
-
India needs 245 runs to win at lunch ⏳#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/DvsbtzDIvp
— ICC (@ICC) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India needs 245 runs to win at lunch ⏳#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/DvsbtzDIvp
— ICC (@ICC) January 19, 2021India needs 245 runs to win at lunch ⏳#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/DvsbtzDIvp
— ICC (@ICC) January 19, 2021
இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் 64 ரன்களுடனும், புஜாரா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இருப்பினும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 245 ரன்கள் தேவை என்பதால், இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நடராஜன் குறித்து சர்ச்சையை கிளப்பும் வார்னே: ட்விட்டரில் ரசிகர்கள் பதிலடி!