ETV Bharat / sports

பிங்க் தொப்பியுடன் போஸ் கொடுத்த இந்திய அணி வீரர்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்த பின்னர் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் பிங்க் நிறத்தொப்பியை அணிந்தபடி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

IND vs AUS: Pant, Gill and Saini 'look dapper' in pink caps

author img

By

Published : Jan 13, 2021, 9:46 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் இப்போட்டி பிங்க் டெஸ்ட் போட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

இதற்கான காரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ரத்தின் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் முயற்சியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த பிங்க் டெஸ்டை முன்னெடுத்துள்ளது. மெக்ரத், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 முதல் சிட்னி மைதானத்தில் இந்த பிங்க் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சிட்னியில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பச்சை நிற தொப்பிக்கு பதிலாக பிங்க் நிற தொப்பியை அணி விளையாடினர். இப்போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது.

இதையடுத்து போட்டி முடிவுக்குபின் இந்திய அணியின் ரிஷப் பந்த், சுப்மன் கில், நவ்தீப் சைனி ஆகியோர் ஆஸ்திரேலியாவின் பிங்க் நிறத்தொப்பியை அணிந்தபடி, எடுத்த புகைப்படத்தை தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டனர்.

இதனை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களது வீரர்கள் மெக்ராத்தின் பிங்க் நிற தொப்பியை அணிந்து தோற்றமளிக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளது. மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரிஸ்பேன் ஹோட்டலில் டீம் இந்தியாவுக்கு அடிப்படை வசதிகள் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.